Pages

Wednesday 20 November 2013

கற்பனையில் விரிந்த
எண்ணங்கள்
வலையை பின்னிக்கொண்டு
மீள விடாது
என்னை சிறைப்படுத்த .........
மீண்டு எழ எத்தனித்தும்
பிடித்து இழுக்கும்
பார்வை ஒன்றே போதும் !
என்றும் என்னை உயிர்பிக்க ..

நம்பிக்கை நங்கூரமிடுகிறது
என்னுள்
நிழல்கள் கூட
நிஜமாய் மாறுமென ....

Wednesday 5 June 2013

எப்போதும் இல்லாத 
புது அனுபவங்கள் ....
உன்னை சந்தித்த 
பிறகுதான்.

என்றுமே இல்லாத 
குழப்பம்கூட 
உன்னை சிந்தித்த
பின்புதான் ...

கட்டையாய் கிடந்த 
என்னுள் பசும்துளிர்களை 
துளிர்கச்செய்தாய் .

ஆனால் ...........
உன் மௌனங்களால் 
என்னுள் சூறாவளியை 
சுழலச் செய்கிறாய் .
ஒவ்வொரு நாளும்
உடுத்திடும் ஆடைகள் ....
கலைப்பாட்டை தேர்ந்தெடுக்கும் 
ரசனை ....
என்னை வியப்பில் ஆழ்த்தும்.

தினம் தினம் மலரும் 
புதிய பூவாய் .....
உந்தன் தரிசனம்.

பார்த்த முகந்தான் 
என்ற அலுப்பில்லாமல் 
சுற்றிவரும் நிலாவாய் 
இந்த பூமியை .

வெளிச்சம் விழுங்கிய
இரவு பொழுதில் 
வெகுநேர தொலைபேசி 
உரையாடல் 
தொலைந்துபோன மனசு......
இறுதியில் எந்த முடிவும் 
புலப்படாது சாமர்த்தியமாய் 
முடிந்ததும்.

இன்னும் மனவெளிச்சமும் 
மங்கிப்போய்.

இன்னும் பேசி 
இருக்கலாமோ? 
என்ன சொல்ல 
முனைந்தாள்?
பிடித்ததை பிடிக்கவில்லை 
என்கிறாளா?

வெளிபடுத்துதல் 
சற்று சுவாரசியம் 
குறைக்கும் என தள்ளி 
போடுகிறாளா?

நிறைய கேள்விகளோடு 
குழம்பிய மனது குட்டையாய்........
எந்த மீனை 
பிடிக்கபோகிறாள் ?

Monday 3 June 2013


என்னை பார்க்க வாராதீர்...
தினம் தினம் காலை
வெகுதூரம் வருகிறீர்
சலிப்பே இல்லையா ?

வெளியில் யாருக்கேனும்
தெரிந்தால் வீட்டில்
தொல்லை.........

எல்லாம் சரி.......
வருகிற வேளை
புன்னைகைக்கும்
உன் முகம்
சொல்லவில்லையே !

Wednesday 29 May 2013

உன் நினைவுகளால் 
கொட்டி இறைத்த 
மல்லிகைகளை 
கோர்கத்துவங்கி ...........
இன்று 
கவிதை மாலையாய்..........
முழுதும் நீ படித்தாய் 
என அறியும்போது 

எழுதுகிற எவருக்கும் 
கிடைக்காத அதிசயம்.

யாருக்கென 
எழுதப்பட்டதோ .........
அவளுக்கே சூடிய மாலை 
ஆகிற அற்புதம்............

சிலிர்கிற தருணங்கள்...
பொங்கிடும் உற்சாகம் ..
புரவியிலேறி 
உன்னோடு பயணிக்கிற 
அனுபவமாய் இனிக்கிறது..

Monday 27 May 2013


Photo: முகமறைத்து நீ செல்ல 
பின்தொடர்ந்த எந்தனுக்கு 
உன் கூந்தல் சொல்லிடுமே 
செல்வது நீ என்று.

முகமறைத்து நீ செல்ல 
பின்தொடர்ந்த எந்தனுக்கு 
உன் கூந்தல் சொல்லிடுமே 
செல்வது நீ என்று.